தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாணவியை கொலை செய்த சதீஷிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். சதீஷை 14 நீதிமன்றத்தில் காவல் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே நீதிமன்றத்திற்கு சதீஷ் அழைத்து வரப்பட்ட போது அவர் மீது சிலர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்.
வேல்முருகன் பழங்குடியினரல்ல - தமிழக அரசு விளக்கம்
உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் பழங்குடியினரே அல்ல என தமிழக அரசு விளக்கம். மலைக்குறவர் என சாதிச்சான்று வழங்காமல் அலைகழித்ததாக கூறி வேல்முருகன் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம், இதனை விசாரிக்க டிஆரோ-வை நியமித்து 2 வாரங்களில் அறிக்கை தர காஞ்சிபுரம் ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.