Tamil News Live : ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்த நபர்.. உடலை பெற மறுத்து உறவினர்கள் 2வது நாளாக போராட்டம்!

Breaking News, Today (October 13, 2022 - Thursday): செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | October 13, 2022, 19:23 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:18 (IST)

    ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்த நபர்.. உடலை பெற மறுத்து உறவினர்கள் 2வது நாளாக போராட்டம்!

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் உடலை பெற மறுத்து, அவரது உறவினர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கே.எம்.சி மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    18:33 (IST)

    நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து நடத்துக - தமிழ்நாடு அரசிற்கு ஈபிஎஸ் கோரிக்கை!

    நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசால் தொடரப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு வாய்தா கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது எனவும் காலம் தாமதம் செய்யாமல் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்கை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    17:59 (IST)

    பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்!

    கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 


    17:7 (IST)

    ஆ.ராசா - இந்து மத சர்ச்சை: ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

    இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆ.ராசா மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    16:44 (IST)

    மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த சம்பவம்: உடனிருந்த மாணவியின் தோழியிடம் விசாரணை!

    பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி சதீஷ் என்பவர் கொலை செய்த விவகாரத்தில், மாணவி உடனிருந்த தோழியிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சதீஷின் தந்தை ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    14:12 (IST)

    இளம்பெண்ணை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர்!

    சென்னை மவுண்ட் ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயிலில் தள்ளி கொலை செய்தவிட்டு இளைஞர் ஒருவர் தப்பி ஓடினார். கொலை நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலை செய்த நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    13:22 (IST)

    காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்.

    11:33 (IST)

    ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

    10:48 (IST)

    ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாறுப்பட்ட தீர்ப்பு

    ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா என இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினர்.

    கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடகா அரசின் முடிவை உறுதி செய்தார் நீதிபதி ஹேமந்த் குப்தா. உச்சநீதிமன்றத்தின் மற்றொரு நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப் அணிந்து வர தடை இல்லை என்ற அரசின் முடிவை ரத்து செய்துள்ளார்.

    10:30 (IST)

    ஹிமாச்சல பிரதேசத்தில் நான்காவது வந்தே பாரத் ரெயிலை துவக்கிவைத்தார் பிரதமர் மோடி