Tamil News Live : ஓசி பேருந்து விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி

Breaking News, Today (October 12, 2022 - Wednesday): செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | October 12, 2022, 21:13 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  21:4 (IST)

  ஓசி பேருந்து விவகாரம்: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி

  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, 
  “சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன். வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து  அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். இது போன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தியுள்ளார்.” என தெரிவித்தார்.

  19:17 (IST)

  ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு!

  5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டார்.

  18:42 (IST)

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30ஆம் தேதி பசும்பொன் பயணம்!

  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேரில் மரியாதை செலுத்த ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

  18:24 (IST)

  பணவீக்கம் 7.4%மாக உயர்வு - விலைவாசி உயர வாய்ப்பு!

  செப்டம்பரில் சில்லரை விலை பணவீக்கம் 7.4%காக உயர்ந்துள்ளது. ஆகஸ்டில் 7% மாக இருந்த நிலையில் 0.4% உயர்வு. விலைவாசியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தி வருகிறது. இருப்பினும் பணவிக்கம் உயர்ந்துள்ள நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளது.

  17:13 (IST)

  தேசிய விளையாட்டு திருவிழா: அதிக பதக்கங்கள் வென்று தமிழ்நாடு சாதனை!

  36வது தேசிய விளையாட்டு திருவிழாவில் இந்திய அளவில் 5ஆம் இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. குஜராத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில், 74 பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு அணி, அதிகபட்சமாக தடகளத்தில் 18 பதக்கங்களை பெற்றது. தடகளம், கால்பந்து, ஹாக்கி உட்பட 29 வகை போட்டிகளில் 380 வீரர்கள் பங்கேற்றனர். 

  16:31 (IST)

  2023ம் ஆண்டு: அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு!

  2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


  15:8 (IST)

  பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

  பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிவு எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவு.

  பணமதிப்பிழப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு எழுதிய கடிதம், ரிசர்வ் வங்கியின் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவு & பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது உள்ளிட்ட முக்கிய தகவல்களை தாக்கல் செய்வதற்கு தயாராக இருக்குமாறு உச்சநீதிமன்ற உத்தரவு.

  அனைத்து 500 & 1000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்ய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26வது பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதும், பணமதிப்பிழப்பு செய்ய பின்பற்றப்பட்ட வழிமுறைகள் நியாயமானதா என்பதும் முக்கிய கேள்வி., அதை விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் கருத்து. இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 9 ஆம் தேதி வருகிறது.

  13:39 (IST)

  தமிழகத்தில் தொடர் பால் நிறுத்த போராட்டம் அறிவிப்பு 

  ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42 ஆகவும், எருமை பாலுக்கு ரூ. 51 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் 28ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

  வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி   பலகட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்.  
  வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காணப்படவில்லை எனில் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என திட்டவட்டம்.

  12:42 (IST)

  16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

  மதுரை, திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், தேனி, திண்டுகல், தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்.

  11:57 (IST)

  காம்பியா நாட்டில் இந்திய நிறுவனம் Maiden Pharmaceuticals தயாரித்த இருமல் மருந்து உட்கொண்டு அந்நாட்டில் 66 குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் மருந்துகள்: தமிழகத்தில் விற்கப்படுகிறதா என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை கள ஆய்வு நடத்துகிறது.

  அதில் அந்த நிறுவனத்தின் மருந்து எங்கும் இல்லை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கள ஆய்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

   ஹரியானாவை சேர்ந்த அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் உத்தரவின் பெயரில் பரிசசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

  அந்த மருந்தில் உள்ள diethylene glycol என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள் அளவுக்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே கர்நாடகாவில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளில் இந்த பொருள் உள்ளதா என கண்காணிக்க அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. 

  இந்நிலையில், தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.