இந்தி திணிப்பை கைவிடுக! - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்
உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசின் இந்த முயற்சி இந்தியாவின் பண்முகத்தன்மைக்கு எதிரானது. இது பெரும்பான்மை இந்தியர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்.
- பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

போராட்டத்தில் ஈடுபடும் கவுரவ விரிவுரையாளர்கள் டிஸ்மிஸ் - கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்றாக உரிய தகுதியுடன் இருக்கும் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கவும் கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு!
காஞ்சிபுரம் படப்பையை சேர்ந்த வேல்முருகன்(45) என்கிற நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த நபர், சாதி சான்றிதழ் கேட்பதற்காக நீதிமன்றத்தில் இருக்கும் சட்ட உதவி மையத்திற்கு வந்துள்ளார். சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலை வழக்குகளை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
கொலை வழக்குகளை சட்டம் ஒழுங்கு காவல்துறையினரே விசாரித்து வரும் நிலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால், அதனை விசாரிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு டிஐஜி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம்
பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.