#Tamil News Update : திமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | September 20, 2022, 09:33 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 11 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    9:23 (IST)

    திமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்! 

    திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் ஸ்டாலின் சிறப்பாக செயலாற்றுவதாகவும்,  அரசியலிருந்து ஓய்வு பெறவேண்டும் என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தில் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    8:6 (IST)

    #MegaExclusive முதலமைச்சராக மு.க.ஸ்டாலினின் முதல் நேர்காணல்

    7:54 (IST)

    ஆன்லைன் ரம்மியால் ரூ.10 லட்சம் கடன் -  சென்னையில் 4பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்

    சென்னையில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ராம்குமார் மற்றும் அவருடைய தாயார் மீனாட்சி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய சகோதரி சந்தனமாரி மற்றும் சகோதரியின் மகள் சண்முகப்பிரியா இருவரும் விஷம் அருந்தியதில் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஏற்பட்ட கடனால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

    7:45 (IST)

    மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    7:10 (IST)

    இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடக்கம்

    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. மொகாலியில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தப்போட்டியில் ஆஸ்திரிலியா அணிக்கு எதிராக ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஒத்திகையாக அமைந்துள்ள இந்த தொடர், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    6:57 (IST)

    வணக்கம் வாசகர்களே..!

    இன்று செப்டம்பர் 20 ( செவ்வாய்க்கிழமை) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்