அன்புமணி மீதான வழக்கு ரத்து - ஐகோர்ட்
2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் விதிகளை மீறி "சொந்தங்களே சிந்திப்பீர்" என்ற தலைப்பில் பிரச்சார குறுந்தகடு விநியோகித்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கள்ளக்காதல் தொடர்பாக மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்ற கணவன்
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் காமராஜ்(47) இவரது மனைவி சுதா(40) இவரது மனைவிக்கும் அதே ஊரை சேர்ந்த மற்றொருவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், மேலும் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இது குறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த சுதாவை அவரது கணவர் காமராஜ் நீதிமன்ற வளாகம் முன்பு அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இச்சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சுதா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் லேசான காயமடைந்த காமராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்களின் கீழ் இயங்கும் 10 நியாய விலை கடைகளில் தரமற்ற அரிசி வினியோகம் செய்தோர் மீது நடவடிக்கை.
காவேரிப்பாக்கம் கிடங்கில் இருந்து தரமற்ற அரிசியை 10 நியாய விலைகடைகளுக்கு அனுப்பிய சங்க செயளார்கள், இணைப்பதிவாளர் ஆகியோர் தற்காலிக பணி இடை நீக்கம்.
மேலும் நியாய விலை கடைகளில் அரியை குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகித்த 10 நியாய விலை கடை விற்பனையாளர்களும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு துறை உத்தரவு.

840 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தம்..
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 5 யூனிட்களிள் இன்று காலை மூன்று யூனிட்களில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஆகிய நான்கு யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1வது யூனிட்டில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது..
பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 'விருப்பன் திருநாள்' என்றழைக்கப்படும் சித்திரைத் தேரோட்டம் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளிமாலை, பச்சைப் பட்டு உடுத்தி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருள, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா.." கோஷங்கள் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.