Tamil News Live: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | September 19, 2022, 13:10 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 11 DAYS AGO

    AUTO-REFRESH

    13:3 (IST)

    சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    10:13 (IST)

    இந்தியாவில் மேலும் 4,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து  4,735 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 48,027 பேர் கொரோனா தொற்றுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    8:24 (IST)

    ஸ்ரீவில்லிபுத்தூர் : கார் விபத்தில் இருவர் பலி

    மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம் முன்பு மதுரையில் இருந்து வந்த கார் மரத்தின் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி. ஒருவர் படுகாயம்

    7:41 (IST)

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் பாஜகவில் இன்று இணைகிறார்

    உட்கட்சி மோதலால் காங்கிரஸில் இருந்து விலகிய  பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் ’பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அண்மையில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். இந்த நிலையில் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணையவுள்ளதாகவும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவில் இணைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


    6:44 (IST)

    பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது உடல் கடந்த 4 நாட்களாக வெஸ்ட் மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இறுதிச் சடங்குகள், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது.

    6:40 (IST)

    வணக்கம் வாசகர்களே..!

    இன்று செப்டம்பர் 19 ( திங்கட்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்