6 முதல் 12-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 21, 2022, 19:44 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 21 DAYS AGO

  AUTO-REFRESH

  19:42 (IST)

  6 முதல் 12-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 4  முதல் 12 ஆம் தேதி வரையிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையும் பருவ தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  16:22 (IST)

  குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் : பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை

  குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாஜக வேட்டபாளர் 540 பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்கட்சிகள் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகள் பெற்றுள்ளார். இன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

  12:4 (IST)

  கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற பெற்றோர் சம்மதம்

  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர்.

  11:24 (IST)

  கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு  உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் PS நரசிம்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தங்களது தேர்விலான மருத்துவ நிபுணர்களை நியமிக்க மாணவி தந்தை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டது நாங்கள் தான். உரிய நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை என மாணவி தந்தை குற்றச்சாட்டு. நீங்கள் என் உயர்நீதிமன்றத்தில் இவை அனைத்தையும் கூறலாமே ? உயர்நீதிமன்றத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கை திரும்பப் பெற்று உயர்நீதிமன்றம் செல்லுங்கள் அல்லது வழக்கு தள்ளுபடி செய்யபடும் என நீதிபதி கூறினார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தலை ஏற்று கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை வழக்கை  திரும்ப பெற்றார்.

  11:11 (IST)

  அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றம்

  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட  சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்டது.  மயிலாப்பூர் வட்டாச்சியர் ஜெக ஜீவன் ராம் சீலை அகற்றினார்.

  10:11 (IST)

  இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

  இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்ததையடுத்து இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க  அதிரபராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில் இலங்கையில் 8-வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க

  9:14 (IST)

  அம்பத்தூர் வாவின்- திருமங்கலம் சிக்னல் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல்

  அம்பத்தூர் வாவின் முதல் திருமங்கலம் சிக்னல் வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல். சாலையின் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர்.


  9:7 (IST)


  அதிமுக அலுவலக சீல் இன்று அகற்றப்படுகிறது

  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட   சீல் நீதிமன்ற உத்தரவுபடி இன்று காலை 10 மணிக்கு அகற்றப்படுகிறது. கோட்டாசியர், வட்டாசியர் தலைமையில் காவல் துறை பாதுகாப்புடன் இன்று சீல் அகற்றப்படுகிறது. துணை ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு. அதிமுக அலுவலகத்தின் சாவியை மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கவுள்ளனர். 10 நாட்களுக்கு பிறகு அதிமுக அலுவலகம் திறக்கப்படுகிறது.

  8:13 (IST)

  விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை

  அரசின் எச்சரிக்கையை மீறி விடுப்பு அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது..18-ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கம் ஏற்பு.

  8:13 (IST)

  விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை

  அரசின் எச்சரிக்கையை மீறி விடுப்பு அறிவித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது..18-ம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு பதில் ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கம் ஏற்பு.