நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. 08.02.2022 தமிழக அரசு அனுப்பிய நீட் மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பு வைத்தார்.தமிழக சட்டத்துறைக்கு கடந்த வாரம் இது குறித்த பதில் வந்துள்ளது.இந்த மசோதாவை நிறைவேற்ற மாநில சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா, இந்த சட்டம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளதா, நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கிறதா என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சட்டத்துறை பதில் தயாரித்துள்ளது - -சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
சிக்னல் கோளாறு - ரயில் சேவை பாதிப்பு
சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வருவதால் பயணிகள் அவதி
செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக தற்போது வண்டலூர் ரயில் நிலையத்தில் நிற்கிறது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது
திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) சோதனை. 100க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) பாதுகாப்பு.
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள், சிறப்பு முகாமில் இருந்து கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கம் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், போலி கடவுச்சீட்டு மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் சொத்துகள் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.