அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: வங்கி ஏற்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 19, 2022, 20:13 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 25 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  20:7 (IST)


  அ.தி.மு.க.பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: வங்கி ஏற்பு 

  அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றன. காசோலைகள், வங்கிக் கணக்கை கையாள திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிகாரம் உள்ளதாக வங்கிகளுக்கு கடந்த ஜூலை 12ம் தேதி எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

  19:25 (IST)

  மறு பிரேதப் பரிசோதனை நிறைவு!

  தொடர்ந்து, மூன்று மணி நேரம் நடைபெற்ற மாணவியின் மறு பிரேதப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது.

  18:40 (IST)

  மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

  வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். 

  18:32 (IST)

  மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம்: அண்ணாமலை

  மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம், மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். தமிழக அரசு,  மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

  18:20 (IST)

  அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

  மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கண்டித்து ஜூலை 25ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற 25 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதி.முக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

  15:17 (IST)

  ஜூன் 23 பொதுக்குழு வழக்கை முடிக்கக் கூடாது - ஓபிஎஸ்

  ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையிட்டு வழக்கை முடிக்கக் கூடாது என ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் 

  14:31 (IST)

  கனியாமூர் பள்ளியை  மீண்டும் இயக்க ஆலோசனை

  கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் பள்ளியை, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் மீண்டும் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பள்ளியின் நிலை, மாணவர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட தகவல்கள் முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

  14:18 (IST)

  கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைப்பு

  கள்ளக்குறிச்சி  பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் கலவரம் தொடர்பாக விசாரிக்க சேலம் டிஐஜி பிரவீன்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைப்பு

  13:51 (IST)

  யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

  13:42 (IST)

  நீட் விலக்கு மசோதா தமிழக அரசின் பதிலுக்காக காத்திருப்பதாக மத்திய அரசு தகவல்
   

  நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது  என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்