Breaking News in Tamil : விநாயகர் சதுர்த்தி - மதுரையில் பூக்கள் விலை உச்சம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 30, 2022, 09:20 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    10:20 (IST)

    துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  துணைவேந்தர்கள் மாநாடு துவங்கியது. கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் மாநாடு துவங்கி நடந்து வருகிறது.  இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தர்களாக உள்ள  அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ரகுபதி மெய்யநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்பு.

    9:16 (IST)

    விநாயகர் சதுர்த்தி - மதுரையில் பூக்கள் விலை உச்சம்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ இன்று 1600 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.

    50 - 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 200 ரூபாய்க்கும், 250 - 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 900 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் இன்று 250 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி இன்று 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    8:38 (IST)

    மயிலாடுதுறை : மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவன் தற்கொலை

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த அறிவழகன் (50) குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். படுகாயம் அடைந்த மனைவி பிரேமா என்கிற ரெஜினாபீவி தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    7:11 (IST)

    101-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் டீசல்

    சென்னையில் 101-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல்  விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    6:56 (IST)

    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 30 ( செவ்வாய்க்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்