Breaking News in Tamil : இனி ஜியோ மார்ட்டில் இருக்கும் பொருட்களை வாட்ஸ் அப்பில் வாங்கிக்கொள்ளலாம்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 29, 2022, 15:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    15:18 (IST)

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் மெட்டா நிறுவனமும் இணைந்து ஜியோ மார்ட் சேவையை வாட்ஸ் அப்பில் கொண்டு வர புதிய திட்டம். வாட்ஸ் அப் மூலம் ஜியோ மார்ட்டில் இருக்கும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

    15:6 (IST)

    மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது - முகேஷ் அம்பானி

    15:6 (IST)

    உலகம் முழுக்க நிலவும் ஒரு கணிக்கமுடியாத சூழலில் இந்தியா மட்டும் வளர்ச்சிக்கும் சமநிலைக்கும் அடையாளமாக விளங்குகிறது - முகேஷ் அம்பானி

    15:6 (IST)

    மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது - முகேஷ் அம்பானி

    14:45 (IST)

    ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக 20 ஜிபி டேட்டா பயன்படுக்கிறார்கள். நாடு முழுவதும் 5ஜி சேவையை அமல்படுத்த ரூ 2லட்சம் கோடி செலவு செய்துள்ளோம். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது ஜியோவால் சாத்தியமானது

     - முகேஷ் அம்பானி

    14:32 (IST)

    டிஜிட்டல் சேவையை வழங்குவதில்  ஜியோ இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.   ஜியோ நிறுவனம் உலகத்தரத்திலான சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. - முகேஷ் அம்பானி

    14:22 (IST)

    சென்னையில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை

    ரிலையன்ஸின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் 5ஜி பிராட்பேண்ட் சேவை அறிமுகம். ரிலையன்ஸ் நிறுவனம் 5ஜிக்கான தனி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லியில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை. 2023 டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் ஜியோ 5ஜி சேவை வழங்கப்படும். - முகேஷ் அம்பானி

    14:15 (IST)

    14:13 (IST)

    கடந்தாண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலை 

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறார். 
    நாட்டின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது.  கடந்தாண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு உள்ளது. - முகேஷ் அம்பானி

    14:7 (IST)
    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது