மாநிலங்களவையில் கனிமொழி உட்பட திமுக எம்.பிக்கள் சஸ்பெண்ட்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 26, 2022, 14:43 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 24 DAYS AGO

  AUTO-REFRESH

  14:39 (IST)

  திமுக எம்.பிக்கள் 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட்

  மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  14:21 (IST)


  சசிகலா அதிமுகவில்தான் இருக்கிறார் - கோவை செல்வராஜ்

  அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கவில்லை அவர் இன்னும் அதிமுகவில் தான் இருக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவிற்கும் சம்பந்தமே இல்லை. ஓ.பி.எஸ் எடுப்பது தான் அதிமுகவில் முடிவு. ஓ.பி.எஸ். பட்டா நிலம், எடப்பாடி பழனிச்சாமி புறம்போக்கு நிலம். எனவே பட்டா நிலத்திற்கு தான் செல்வாக்கு அதிகம் என்று தெரிவித்துள்ளார்.

  14:15 (IST)

  ஓ.பி.எஸ் தற்போது துரோக யுத்தம் நடத்துகிறார் - ஆர்.பி.உதயகுமார்

  தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது பகல் கனவாகத்தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.

  13:15 (IST)

  டெல்லியில் ராகுல் காந்தி கைது

  டெல்லியில்  சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்

  11:40 (IST)

  ஈபிஎஸ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

  டெண்டர் முறைக்கேடு  புகாரில் ஈபிஎஸ் மீதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு. வழக்கு விசாரணைக்கு வருவது தங்களுக்கு தெரியாது என ஈபிஎஸ் தரப்பு வாதம். ஆகஸ்ட் 2-ம் தேதி வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது,

  10:50 (IST)

  திருவள்ளூர் 12-ம் வகுப்பு மாணவி உடற்கூராய்வு நிறைவு

  திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 12-ம் வகுப்பு மாணவியின் உடற்கூராய்வு நிறைவுபெற்றது. திருவள்ளூர் அரசு மருத்துவமனை முதல்வர் தலைமையில் மாணவியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு.

  10:28 (IST)

  5ஜி அலைக்கற்றை ஏலம் ஆன்லைனில் தொடங்கியது

  இந்தியாவில் 5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலம் தொடங்கியது.  இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், அதானி குழுமம் , வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பங்கேற்பு.

  9:12 (IST)

  தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

  தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 440வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுஇரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
  திருவிழாவையொட்டி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் காலை திருப்பலி நடைபெற்றது.பல்லாயிர கணக்கான பக்தர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பங்கேற்றனர்.பக்தர்கள் நேர்ச்சையாக பால்,  வாழை உள்ளிட்டவற்றை கொடி மரத்தில் வைத்து காணிக்கை செலுத்தினர்

  6:32 (IST)

  இந்தியாவில் 5ஜி எனப்படும் 5-ம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான ஏலம் இன்று தொடங்குகிறது. இதில், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 4 நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

  6:27 (IST)

  எடப்பாடி பழனிசாமி வழக்கு 

  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரிக்கிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.