Breaking News in Tamil : சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை : புதிய சிசிடிவி வெளியீடு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 24, 2022, 12:57 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    12:53 (IST)

    அரும்பாக்கம் வங்கி கொள்ளை : புதிய சிசிடிவி வெளியீடு

    அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. வங்கியில் கொள்ளையடித்த பிறகு கோவை நகை வியபாரி ஸ்ரீவத்சவா பல்லாவரம் ஹோட்டலில் தங்கி தங்க நகையை உருக்கி எடுத்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.  நகை உருக்கும் மெஷின் கொண்டு வருவதும் பதிவாகியுள்ளது.

    12:1 (IST)

    மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு:  லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரில் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரி கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு சென்ற பெருவெள்ளம் காரணமாக மூடப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக உத்தமர்சீலியில் உள்ள ஸ்டாக் பாயிண்ட்டில் இருந்து மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்ததால் பரபரப்பு.

    10:38 (IST)

    பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு

    நாளை தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு.   நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின் கலந்தாய்வு தொடங்கும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் பொன்முடி

    9:56 (IST)

    புதுக்கோட்டை  : மாமுண்டி கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா

    புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மாமுண்டி கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழா 22 ஆண்டுகளுக்கு பிறகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்வழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    8:21 (IST)

    நீலகிரி :சாலையில் உலா வந்த கரடி..!

    குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் உலா வந்த கரடி.நீண்ட நேரம் கரடி சாலையில் சுற்றியதால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்தனர். இரவு நேரங்களில் சாலையில் அடிக்கடி கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

    7:7 (IST)

    குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு -  சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை 

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை இல்லாத காரணத்தினால் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளவை தாண்டி ஆர்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கால்  சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் புலியருவி,சிற்றருவி, பழையகுற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்த செல்கின்றனர்.

    7:1 (IST)

    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 24 ( புதன்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்