Breaking News in Tamil : துணை வேந்தர் நியமன மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 20, 2022, 08:48 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    8:43 (IST)

    துணை வேந்தர் நியமன மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு

    தமிழக அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் கடந்த ஏப்ரலில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒப்புதல் கோரி ஆளுநருக்கு இரண்டு மசோதாக்களும் அனுப்பப்பட்டிருந்தன. பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது. மசோதா ஒப்புதலுக்கு அனுப்பட்டிருந்த நிலையில்   ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது விளக்கம் கேட்டுள்ளார்.  தமிழ்நாடு அரசின் மசோதா குறித்து விளக்கம் அளிக்க தலைமைச் செயலருக்கு ஆளுநர் கடிதம்.

    7:44 (IST)

    பொறியியல் கலந்தாய்வு  இன்று தொடக்கம்

    பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது. விண்ணப்பித்த1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு, இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    7:37 (IST)

    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 20 ( சனிக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்