Breaking News in Tamil: நெல்லை கண்ணன் காலமானார்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 18, 2022, 13:35 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  13:25 (IST)

  நெல்லை கண்ணன் காலமானார்

  தமிழறிஞரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லைக் கண்ணன் (வயது 77)  உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

  10:38 (IST)


  ஒன்றிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு  ஓபிஎஸ் அழைப்பு

  சென்னை பசுமை வழிச்சாலையில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்., “ அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு நன்றி. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது , அவற்றை மனதில் இருந்து அப்புறப்டுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும். மீண்டும் ஆளும் நிலைக்கு அதிமுக வர வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் , எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை.” என்றார்.

  10:0 (IST)

  புதுக்கோட்டையில் பொதுமக்கள் சாலை மறியல

  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே துவார் கிராமத்தில் இடிக்கப்பட்ட நிழற் குடையை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர கோரி பொதுமக்கள் கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் மறியல் -போக்குவரத்து பாதிப்பு.

  9:5 (IST)

  மதுரை திருப்பரங்குன்றம் அருகே 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்


  மதுரை திருப்பரங்குன்றம்  சரவண பொய்கையில் குளிக்கவும், துணி துவைக்கவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில், அதை திறக்க வேண்டும் என்று 100 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள், இதனால் திருப்பரங்குன்றம் - பெரியார் நிலையம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

  8:23 (IST)

  சென்னையில் இன்று மின்தடை பகுதிகள்

  சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18 -2022) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சைதாப்பேட்டை, பெருங்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தி நகர் பகுதி:

  சைதாப்பேட்டை தாடண்டர் நகர், அண்ணாசாலை, ஜோதிமா நகர், அண்ணா நகர் தெரு, செட்டி தெரு, பஜார் ரோடு, ஆலந்தூர் ரோடு, சுப்பிரமணிய சாமி கோயில் தெரு, சுப்புபிள்ளை தோட்டம், பிள்ளையார் கோயில் தெரு, தர்மராஜா கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

  ஐடி காரிடர் பகுதி:

  பெருங்குடி துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர், செந்தில் நகர், மணிகோடி சீனிவாசன் நகர், பிரபு நகர், மாருதி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8:11 (IST)

  கிருஷ்ண ஜெயந்தி விழா - பூக்கள் விற்பனை அமோகம் 

  கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வாங்கிச்செல்லும் கேரளா  வியாபாரிகள். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரிப்பு. 20 டன் பூக்கள் நேற்று முன் தினம்  வந்த நிலையில் தற்போது 40 டன் பூக்கள் வரத்து. பிச்சிப்பூ ஒரு கிலோ  நேற்று 250 ரூபாய் இன்று 400 ரூபாய், மல்லிப்பூ 500 ரூபாய் க்கும் விற்பனை. அரளிப்பூ 110 ரூபாய் க்கும் விற்பனை.

  7:35 (IST)

  ஆப்கான் மசூதியில் குண்டுவெடிப்பு - 20-க்கும் மேற்பட்டோர் பலி

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நேற்று மாலை ஏராளமானோர் வழக்கமான தொழுகைக்கான குவிந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

  7:20 (IST)

  கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே, இரு மாநில எல்லையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தவித்து வரும் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். தற்போது ஆனைகட்டி அருகே தோலாம்பாளையம் செங்குட்டை பகுதியில் காட்டு யானை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் யானை இருப்பதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை மருத்துவக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்

  7:17 (IST)
  மெல்போர்ன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கற்றுத்தரப்படும் B.Sc., படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் - சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகம் & சென்னைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் B.Sc., Physics, B.Sc., Chemistry, B.Sc., Mathematics ( Blended ) படிப்புகளில் சேர www.unom.ac.in இணையதளத்தில் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் கூடுதல் விவரங்களுக்கு 044-25399779 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு