Live Updates : ஜூன் 23-க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் - அதிமுக வழக்கில் தீர்ப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 17, 2022, 11:50 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A MONTH AGO

  AUTO-REFRESH

  13:8 (IST)

  அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு - தேனியில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்   கொண்டாட்டம்.

  தேனி மாவட்டம் பெரியகுளம், அல்லிநகரம் தேனி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

  11:49 (IST)

  ஜூன் 23-க்கு முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும் - அதிமுக வழக்கில் தீர்ப்பு

  அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஜூன் 23-க்கு  முன்னர் இருந்த நிலையே நீடிக்க  வேண்டும். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் கூட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

  10:52 (IST)

  குடியரசு துணைத்தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

  குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு . குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றதற்காக நேரில் வாழ்த்து. 


  10:53 (IST)

  குடியரசு துணைத்தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

  குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு . குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றதற்காக நேரில் வாழ்த்து. 


  10:40 (IST)

  அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அளிக்கவுள்ளது. 

  9:59 (IST)

  திருச்சி திருவானைக்காவல் பகுதியில் மின்சார வயர்களில் மரக்கிளைகள் சிக்குவதாக கூறி கிளைகளை அகற்றும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்று காலை திருவானைக்கோவில் வெங்கடேசா திரையரங்கம் எதிரே மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில் சாலை ஓரமாக இருந்த பனை மரத்தை ஊழியர்கள் அகற்றிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. 

  திடீரென மரம் சாலையின் குறுக்கே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவ்வழியே வந்த பயணிகள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை நிறுத்திக் கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த மரத்தை அப்புறப்படுத்த முடியாமல் ஊழியர்கள் திணறினர் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


  9:56 (IST)

  கோவை ஆனைகட்டி கோபநாரி  வனப்பகுதியில் இரண்டாவது நாளாக ட்ரோன் மூலம் உடல்நலம்  பாதிக்கப்பட்ட காட்டுயானையை தேடும் பணி துவங்கியுள்ளது. டாப் சிலிப்பில் இருந்து கும்கி யானை கலீம்  ஆனைகட்டிக்கு  வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் , முத்து என்கிற அரிசிராஜா கும்கி யானையும் ஆனைகட்டிக்கு வரவழைக்கப்பட  இருக்கிறது. வனத்துறை மருத்துவர் குழுவுடன் 70க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை தேடி வருகின்றனர்.

  8:38 (IST)

  அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

  அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தர்ப்பு தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கை விசாரிக்க பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று பிறப்பிக்கவுள்ளார்.

  8:22 (IST)

   தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்..!

  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத்தொடரந்து காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றார்.

  8:11 (IST)

  வணக்கம் நேயர்களே..!

  இன்று ஆகஸ்ட் 17 ( புதன்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்