Tamil News Live Updates : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 12, 2022, 07:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 MONTHS AGO

    AUTO-REFRESH

    12:34 (IST)

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல

    விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுகின்றது. வெளிப்படையாக ஆன்லைன் தளங்களில் 3000 ரூபாய், 4000 ரூபாயென மிக அதிக விலைக்குத் தனியார் பேருந்துகள் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன. 

    சென்னை - திருச்சி - ரூ 3200
    சென்னை - கோயம்புத்தூர் - ரூ.4000
    ஓசூர் - கோவில்பட்டி - ரூ 3949  என டிக்கெட் விற்பனை நடைபெறுவது தெரியவந்துள்ளது.

    7:20 (IST)

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு


    நாமக்கள் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் நாமக்கல்லில் 24 இடங்களிலும், திருப்பூர்,  மதுரையிலும் சோதனை நடந்து வருகிறது.

    7:13 (IST)


    அழகர்கோயில்  ஆடிப்பெருந்திருவிழா :  கோவிந்தா கோஷம்

    மதுரை அழகர்கோயில்  ஆடிப்பெருந்திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெருவாரியாக பங்கேற்று உள்ளனர். கோவிந்தா கோஷம் முழங்க ஆர்ப்பரித்து தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். 

    பாரம்பரிய வழக்கப்படி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து, கோயில் வளாகத்தின் உள்ளேயே உணவு சமைத்து பகிர்ந்து உண்டு, நேர்த்திக்கடன் செலுத்தி விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், பிற நிகழ்வுகள் மக்கள் அனுமதியின்றி நடைபெற்றிருந்தது.
    இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேரோட்ட விழா என்பதால் மக்கள் பெருந்திரளாகவும், புது உற்சாகத்துடனும் பங்கேற்றுள்ளனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


    6:55 (IST)

    அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது

    மதுரை அழகர்கோயில்  ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.விழாவை முன்னிட்டு தினமும் காலையில் கள்ளழகர் தங்கப் பல்லக்கிலும், மலையில் சிம்மம், அனுமன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி இருந்தார். இவ்விழாவின் ஒன்பதாம் நாளான இன்று விழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் தேரில் எழுந்தருளி உள்ளார்.


    6:38 (IST)

    வணக்கம் நேயர்களே..!
    இன்று ஆகஸ்ட் 12 ( வெள்ளிக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்