செஸ் ஒலிம்பியாட்: தோனி பங்கேற்கவில்லை

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | August 09, 2022, 09:31 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 2 MONTHS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  10:15 (IST)

  உதகையில் ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து தடை

  உதகை நகரிலிருந்து எப்பநாடு கவரட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் உள்ள டம்ளர் முடக்கு எனும் பகுதியில் அதிகாலையில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்படைந்தது...

  9:28 (IST)

  செஸ் ஒலிம்பியாட் :  தோனி பங்கேற்கவில்லை

  செஸ் ஒலிம்பியாட்  நிறைவு நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  தோனி பங்கேற்கவில்லை. நேற்றைய விழா அழைப்பிதழில் தோனியின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அவர் பங்கேற்கவில்லை. 

  7:50 (IST)

  செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா

  செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி துவோர்கோவிச், ஆசிய செஸ் கூட்டமைப்பின் தலைவர் கலீஃபா அல் நஹியான், இந்திய அணியின் ஆலோசகர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதில், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கோலாகல கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  7:49 (IST)


  வணக்கம் நேயர்களே..!
  இன்று ஆகஸ்ட், 09 (செவ்வாய்க்கிழமை) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்