நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்.

 • News18 Tamil
 • | August 06, 2022, 13:14 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 12 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  13:9 (IST)

  நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு-வுக்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது அறிவிப்பு. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்குவார். 

  11:22 (IST)


  குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தங்களது வாக்கினை செலுத்தினர். 

  9:8 (IST)

  கோடநாடு வழக்கு : மருது அழகுராஜூக்கு சம்மன்

  கோடநாடு கொலை கொள்ளை வழக்கில்  இன்று ஆஜராக நமது அம்மா நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனிப்படை போலீஸ்சம்மன்.  கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் இன்று ஆஜராக உத்தரவு. தனிப்படை காவலர்களின் அழைப்பாணைய ஏற்று இன்று விசாரணைக்கு ஆஜராகிறேன் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

  7:12 (IST)

  ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


  தருமபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (06.08.22) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,75,000 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து உள்ளது.நேற்று மாலை வினாடிக்கு 1,65,000 கனஅடியாக இருந்தது. இன்று மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.