Breaking News in Tamil : நொய்டா பிரம்மாண்ட கட்டடம் தரைமட்டமானது

Supertech Noida Twin Tower Demolition LIVE: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 28, 2022, 15:09 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    14:42 (IST)
    நொய்டா பிரம்மாண்ட இரட்டை கோபுரம் தரைமட்டமான காட்சிகள்
    14:41 (IST)

    நொய்டா பிரம்மாண்ட இரட்டை கோபுரம் தரைமட்டமானது

    14:16 (IST)

    நொய்டா இரட்டை கோபுரம் - சற்று நேரத்தில் தகர்ப்பு

    உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட  40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டடம் சற்று நேரத்தில் தகர்க்கப்படவுள்ளது.  தகர்ப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 3700 கிலோ வெடி மருந்து பயன்படுத்தி இரட்டை கோபுரம் தகர்க்கப்படவுள்ளது. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    13:27 (IST)

    நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடக்கம்
     

    13:18 (IST)

    நொய்டா இரட்டை கோபுரம் : கவுண்டவுன் தொடங்கியது

    நொய்டாவில், சட்ட விரோதமாக கட்டப்பட்ட இரண்டு வானளாவிய 40 மாடி கட்டடங்கள் இடிக்கும் பணிக்கான கவுண்டவுன் தொடங்கியது. அப்பகுதியில் இருந்த குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்.

    13:1 (IST)

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், சட்ட விரோதமாக கட்டப்பட்ட இரண்டு வானளாவிய 40 மாடி கட்டடங்கள் வெறும் 9 வினாடிகளில் இன்று  இடிக்கப்படுகின்றன.

    11:24 (IST)

    மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,10,000 கன அடியிலிருந்து 1,20,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம்  23,000  கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    11:21 (IST)

    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 28 ( ஞாயிற்றுகிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.