Breaking News in Tamil | செப்டம்பர் 10-ம் தேதி பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | August 27, 2022, 12:15 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    12:16 (IST)

    செப்டம்பர் 10-ல் பி.இ பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

    சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்.
    பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 10ம் தேதி துவங்குகிறது எனக் கூறினார்.

    12:0 (IST)


    சசிகலாவை கட்டாயப்படுத்த விரும்பவில்லை -  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி 

    ஜெயலலிதா மரணம் தொடர்பான  ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். 590 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், “ அறிக்கையில் இடம்பெற்ற தகவல்களை வெளியில் சொல்ல முடியாது.  அறிக்கை வெளியிடுவது குறித்து அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். வி.கே.சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை.  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை காலதாமதம் செய்யவில்லை. விசாரணையை நிறைவாகவே செய்துள்ளேன்."என்றார்.

    10:50 (IST)

    ஜெயலலிதா மரணம் தொடர்பான  ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் .590 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக தகவல்

    10:46 (IST)


    வணக்கம் நேயர்களே..!

    இன்று ஆகஸ்ட் 27 ( சனிக்கிழமை ) இன்றைய முக்கியச் செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்