Breaking News: கச்சத்தீவை மீட்க பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

PM Modi in Chennai | இன்றைய (மே 26, 2022) முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | May 26, 2022, 19:49 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A YEAR AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    19:14 (IST)

    கேன்ஸ் திரைபப்ட விழாவில் தமிழ் பாரம்பரிய ஆடையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் சிவப்பு கம்பளத்தில் நடை போட்டது பெருமைக்குரியது - பிரதமர் மோடி

    19:12 (IST)

    சென்னை முதல் கனடா வரை...
    மதுரை முதல் மலேசியா வரை...
    நாமக்கல் முதல்  நியூயார்க் வரை...
    சேலம் முதல் தென் ஆப்பிரிக்கா வரை...

    தமிழ் பரவியுள்ளது

    எதுகைமோனையில் பேசிய பிரதமர் மோடி

    18:45 (IST)

    ₹31,530 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.... உடன் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்பு..

    18:43 (IST)

    பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை..

    1. கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்
    2. ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை விரைவாக வழங்கிட வேண்டும்
    3. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்
    4. மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்

    18:41 (IST)

    கச்சத்தீவை மீட்க பிரதமரிடம் மு.க. ஸ்டாலின் கோரிக்கை

    17:50 (IST)

    நேரு உள்விளையாட்டரங்கம் செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர்..


    17:47 (IST)

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி.. சற்று நேரத்தில் 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

    17:33 (IST)

    சென்னை அடையாறு கடற்படை தளத்தில்,  பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார்.

    17:26 (IST)

    தமிழகத்தில் மொத்தம் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்க/ல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதில் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில், 5 திட்டங்களை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

    முதலாவதாக, 500 கோடி ரூபாய் திட்டச்செலவில் 75 கிலோமீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் மதுரை - தேனி அகல ரெயில் பாதை திட்டம் செயல்பாட்டிற்கு வருகிறது.

    தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கிலோ மீட்டர் நீளமுள்ள மூன்றாவது ரயில் பாதையும்,

    115 கிலோ மீட்டரில் எண்ணூர் - செங்கல்பட்டு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும்,

    அத்துடன், 910 கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூர் - பெங்களூரு பகுதிக்கான இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும் தொடங்கப்படுகிறது.

    முக்கியமாக, பிரதமர் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் சென்னையில் கட்டப்பட்டிருக்கும் ஆயிரத்து 152 வீடுகளும் திறக்கப்படுகின்றன.

    இதுபோக, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்படுகிறது.

    முதலாவதாக, 262 கிலோ மீட்டர் தூரத்தில் பெங்களூரு - சென்னை இடையே விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது.

    கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தை இணைக்கும் இந்த திட்டத்தின் மூலம் சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் மூன்று மணி நேரம் குறையும

    அடுத்ததாக, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு கொண்ட நான்கு வழி உயர்மட்ட சாலைக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.

    5 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 21 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த சாலை வருகிறது.

    நெரலூரு - தர்மபுரி இடையே நான்கு வழி நெடுஞ்சாலை, மீன்சுருட்டி - சிதம்பரம் பகுதிகளில் 2 வழி நெடுஞ்சாலையும் பட்டியலில் உள்ளது.

    சரக்கு போக்குவரத்தை வேகப்படுத்தும் நோக்கத்தில், சென்னையில் 1400 கோடி ரூபாயில் "மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்"-கிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

    முக்கியமாக, சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை சீர்ப்படுத்தும் பணியும் தொடங்குகிறது.

    இதற்காக 1800 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

    17:17 (IST)

    சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.