செஸ் ஒலிம்பியாட் : வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மூடல்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 27, 2022, 20:47 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 14 DAYS AGO

  AUTO-REFRESH

  20:46 (IST)

  செஸ் ஒலிம்பியாட் : வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மூடல்

  சென்னையில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று ஒரு நாள் விடுமறை என மாநில அரசு அறிவித்துள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 28.07.2022 (வியாழக்கிழமை) அன்று பார்வையாளர்களுக்கு பூங்கா மூடப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக 02.08.2022 செவ்வாய்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

  17:19 (IST)

  ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் பறக்க தடை


  ஸ்பைஸ்ஜெட்டின் 50 சதவீத விமானங்களை இயக்க 8 வாரங்களுக்கு தடை விதித்து மத்திய விமான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜூன் 5 வரை பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  12:10 (IST)

  அதிமுக ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம். வெயில் காரணமாக மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.  தண்ணீர் கொடுத்து அசுவாசப்படுத்தி நிர்வாகிகள் அவரை அமர வைத்தனர்.

  11:40 (IST)

  சட்டமன்றத்தில் அதிகமாக பொய் பேசுபவர் ஸ்டாலின், அடுத்து செந்தில்பாலாஜி -அண்ணாமலை விமர்சனம்

  தமிழக அரசை கண்டித்து கரூரில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம். பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அண்ணாமலை பேசுகையில், “தமிழக சட்டமன்றத்தில் அதிகம் பொய் சொல்பவர்கள் பட்டியலில் இருப்பவர் முதல்வர் ஸ்டாலின். கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம் அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து ஓட்டுக்களை வாங்க முடியும் அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர்.

  11:18 (IST)

  அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து திமுக நடுங்கி கொண்டு இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி 

  மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “
  மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். எல்லா வரியையும் உயர்த்திய ஒரே அரசு திமுக தான். 

  அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து திமுக நடுங்கி கொண்டு இருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர். சுமார் 15 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்தார். அவர் மீது தொடர்ந்து பொய் வழக்கை திமுக போட்டது. அது அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.

  11:11 (IST)

  மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்.இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம்.ஒருங்கிணைந்த சென்னையின் 9 மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

  மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றாதது உட்பட மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

  8:48 (IST)

  மாமல்லபுரம் வந்தது ஒலிம்பியாட் ஜோதி

  44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் மாமல்லபுரம் வந்தது.  செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது

  8:41 (IST)

  கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தொடர்ந்து மாணவிகள் உயிரிழக்கும் சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தற்கொலையை தடுக்க வேண்டும்.  -பிரேமலதா விஜயகாந்த் 

  6:54 (IST)

  சர்வதேச செஸ் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்

  6:27 (IST)

  தமிழக அரசை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

  தமிழக அரசைக் கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எடப்பாடி பழனிசாமி தலைமையில் 9 மாவட்ட அதிமுக-வினர் சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெறுகிறது.