இலங்கையில் இருந்து மேலும் 5 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணத்தில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் பைபர் படகில் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை பகுதியில் வந்து இறங்கினர்.
இலங்கை தமிழர்களை மெரைன் போலீசார் மீட்டு தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் 22ந்தேதியில் இருந்து இதுவரை 75 பேர் வந்த நிலையில் மேலும் இன்று வந்த 5 பேரை சேர்த்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.