நவம்பர் 24 முதல் ₹1000 வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழை காரணமாக சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததையடுத்து, நவம்பர் 24ஆம் தேதி முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார்.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை
மதுரை திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக அப்பகுதி வாசிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கப்பலூர் சுங்க சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு, கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.
விசாரணைக்கு சென்று திரும்பிய இளைஞர் தற்கொலை விவகாரம் : எஸ்.ஐ. ஆயுத படைக்கு மாற்றம்!
திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ராகுல்ராஜ்ம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்து சென்ற வந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் மகாலட்சுமியை ஆயுதப் படைக்கு மாற்றி திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.