Tamil News Live : உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 19, 2022, 16:24 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 19 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    17:33 (IST)

    மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்

    சிறப்பு முகாமிலுள்ள மற்ற இலங்கை தமிழர்களுடன் இருக்க அனுமதிக்காமல், தனிமைப்படுத்தியுள்ளை கண்டித்து உண்ணாவிரதம் திருச்சி சிறப்பு முகாமில் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயகுமார் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம். உடல் நிலை மோசமானதால்  திருச்சி அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார்  அனுமதி. 

    16:17 (IST)

    உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை..

    12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு... இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற VIACOM 18 MEDIA நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்

    15:55 (IST)

    தமிழகத்தில் சங்க இலக்கியங்களில் காசியை பற்றிய செய்திகள் கிடைகின்றன

    தமிழகத்தில் கலித்தொகையில் காசியை பற்றி செய்திகள் கிடைக்கின்றன. திருப்புகழில் முருகனை பற்றியும் காசியை பற்றியும் பாடப்பட்ட பாடல்கள் கிடைகின்றன. தமிழகத்திலும் தென்காசி என்ற ஊர் இருக்கிறது என காசி சங்கமத்தில் பிரதமர் மோடி உரை. 

    15:48 (IST)

    ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்

    நாம் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று காசி தமிழ் சங்கமம் உணர்த்துகிறது என காசி தமிழ் சங்கத்தில் பிரதமர் மோடி உரை

    15:46 (IST)

    காசிக்கும் தமிழகத்திற்கும்  பண்நெடுங்காலமாக பிணைப்பு உண்டு

    தமிழ்நாட்டில் இருக்கும் திருமண நிகழ்ச்சிகளில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசி, தமிழ்நாடில் சிவமையம், சக்திமையம் சாத்தியமானது. 

    15:39 (IST)

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

    காசியில் துளசிதாசர் பிறந்திருக்கிறார் என்றால் தமிழகத்தில் திருவள்ளுவர் பிறந்திருக்கிறார் என பிரதமர் மோடி உரை

    15:14 (IST)

    காசியில் களைகட்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

    நாதஸ்வரம் உள்ளிட்ட இசை வாத்தியங்களுடன் இளையராஜாவின் இசை கச்சேரி. ஜனனி ஜனனி, ஓம் சிவஹோம் ஆகிய பாடல்களில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடைபெற்று வருகிறது. 

    15:11 (IST)

    13 மொழிகளில் திருக்குறள் நூலை வெளியிட்ட பிரதமர் மோடி

    காசியில் நடைபெறும் தமிழ் சங்கமத்தின் விழாவில் 13 மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி

    13:30 (IST)

    தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    11:10 (IST)

    திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

    அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..