Tamil News Live : தமிழகத்தில் பயிர்க்காப்பீடு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அனுமதி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | November 18, 2022, 21:07 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 20 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  21:1 (IST)

  பயிர்காப்பீடு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

  வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு காப்பிடு செய்ய அவகாசம் நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 21ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

  20:21 (IST)

  பீகாரில் பாலம் இடிந்து விபத்து 

  பீகார் மாநிலத்தில் நாலந்தாவில் கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது. எத்தணை பேர் விபத்துக்குள்ளானார்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. 

  17:46 (IST)

  சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத ஒதுக்கீடு - நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

  தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  15:49 (IST)

  கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கில் மருத்துவர்களின் கோரிக்கை நிராகரிப்பு

  கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மருத்துவர்கள் பால் ராமசங்கர் மற்றும் சோமசுந்தர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு.

  13:41 (IST)

  சென்னை பல்கலை- மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வும் ரத்து!

  வினாத்தாள் குளறுபடியால் இன்று காலை நடைபெற இருந்த தமிழ் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்  மதியம் தமிழ் அரியர் தேர்வு நடைபெற இருந்தது. தற்போது அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டு, ர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11:52 (IST)

  அதிமுக தலைமையில்தான் எப்போதும் கூட்டணி : செல்லூர் ராஜூ

  மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணிக்கு எப்போதும் அதிமுகதான் தலைமை ஏற்கும். அதிமுக கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம். தமிழ்நாடு திராவிட பூமி. இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும்’ என்றார்.

  11:48 (IST)

  இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 

  ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த நாட்டின் முதல் தனியார் ராக்கெட் ’விக்ரம்-எஸ்’ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது. 2 இந்திய செயற்கைக்கோள், 1 வெளிநாட்டு செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  11:20 (IST)

  கேள்வித்தாளில் குளறுபடி : சென்னை பல்கலைக்கழக தமிழ் பாடத் தேர்வு ரத்து!

  சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணைப்பு கல்லூரிகள் உறுப்பு கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டிற்குரிய மூன்றாவது செமஸ்டர் தமிழ் பாடத் தேர்வு தொடங்கியது. ஆனால் தேர்வுக்குரிய கேள்வித்தாளை வழங்காமல் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நான்காவது செமஸ்டர் தேர்வுக்குறிய கேள்வித்தாளை தேர்வுக்கு கொடுத்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது.

  11:10 (IST)

  சமூக அரசியல் மட்டுமின்றி, பொருளாதாரத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் - ஸ்டாலின் பேச்சு 

  தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் (EFSI) நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்புரை பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த கூட்டமைப்பு தொடங்கியது 1920 ஆம் ஆண்டு. இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு.திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியமைத்த ஆண்டு. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தென்னிந்திய வர்த்தக அமைப்பை உருவாக்கப்பட்டது. திராவிட மாடல் சமூக அரசியல் மட்டுமின்றி, தொழில்துறை பொருளாதாரத்தையும் உள்ளடக்கியது தான்’ என்றார்.

  10:19 (IST)

  பஞ்சாயத்து பணம் ரூ.74 லட்சம் முறைக்கேடு -  திருச்சி ஆட்சியர்  அதிரடி உத்தரவு

  பஞ்சாயத்து பணம், 74 லட்சத்தை முறைகேடு செய்ததாக கூறி, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மல்லியம்பத்து ஊராட்சிமன்றத் தலைவர் விக்னேஸ்வரன் என்பவரை பதவி நீக்கம் செய்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

  -