Tamil News Live : ராஜீவ் கொலை வழக்கு : 6 பேர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு

Weather & Rain News Updates Live: தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை அப்டேட் மற்றும் உலக நிகழ்வுகளை உடனுக்குடன் இங்கு அறியலாம்

  • News18 Tamil
  • | November 17, 2022, 20:55 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 9 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    20:37 (IST)

    ராஜீவ் கொலை வழக்கு : 7 பேர் விடுதலையை எதிர்த்து  மத்திய அரசு மனு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

    19:5 (IST)

    சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை விடுமுறை


    சீர்காழி தாலுகாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்ப்பட்டுள்ளது. சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்த காரணத்தினால் அங்கு பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விடுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    16:1 (IST)

    சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் - தமிழக அரசு

    தீபாவளிக்கு அடுத்த நாள் அளித்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை (19.11.2022) அன்று பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என தமிழக அரசு உத்தரிவிட்டுள்ளது.

    11:27 (IST)

    பாஜக நிர்வாகிக்கு தடை விதித்த நீதிமன்றம்!

    அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பாஜக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரப்பி வந்த நிலையில் அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    10:3 (IST)

    ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், குடும்பத்தின் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையையும் முதல்வர் வழங்கினார்

    10:1 (IST)

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

    8:20 (IST)

    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

    அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். ஆகையால் நவம்பர் 20, 21 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    - இந்திய வானிலை ஆய்வு மையம்

    7:25 (IST)

    6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

    தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்.

    - வானிலை ஆய்வு மையம்

    7:2 (IST)

    சபரிமலை மகர விளக்கு பூஜை: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!

    மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.