கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு திரும்பிய 3வது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரும் அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை காலைக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்கிறோம்
கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை நாளை காலை 6 -7 மணிக்குள் பெற்றுக்கொள்கிறோம் என பெற்றோர் தரப்பு தகவல். நீதிபதி கெடு விடுத்த நிலையில் பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தகவல். மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு நாளையே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறீனார். இறுதி ஊர்வலத்தின் போது காவல்துறையின் பாதுகாப்பு அவசியமில்லை என பெற்றோர் தரப்பு தகவல்
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. cbseresults.nic.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்