பரமக்குடி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வியாழக்கிழமையில் வாரச்சந்தை நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை களை இல்லாமல் இருந்தது.இந்நிலையில், ரமலான் பண்டிகைகள் நெருங்குவதால் இன்று கூடிய வாரச்சந்தையில், மொத்தம், 7000 ஆடுகள் விற்பனையானதில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
நெருக்கடிகளுக்கு அடிபணிந்து பதவியிலிருந்து விலக போவதில்லை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மீண்டும் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஆளும் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் ராஜபக்சே, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நெருக்கடிக்கு அடிபணிந்து தான் ஒரு போதும் பதவி விலக போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ஒன்று முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி என அறிவிக்க புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 100% தேர்ச்சிக்கான பட்டியலை மே 15ஆம் தேதிக்குள் கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை திருவிழா விபத்து சசிகலா நேரில் ஆறுதல்
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக் கம்பி சப்பரத்தின் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களின் உறவினர்களை வி.கே.சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று அப்படி கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது, தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். ஓட்டு போட்ட மக்கள் தான் எனவே இவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். உரிய வரைமுறைகளை ஏற்படுத்தினால், வருங்காலங்களில் இதுபோல் உயிர் பலியை தடுக்க முடியும் என்றார்.