மீண்டும் தர்மம் வெல்லும் : ஓபிஎஸ் திட்டவட்டம்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | July 29, 2022, 12:49 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 13 DAYS AGO

  AUTO-REFRESH

  13:49 (IST)

  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..

  தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சியால்  அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

  12:44 (IST)

  மீண்டும் தர்மம் வெல்லும் : ஓபிஎஸ் திட்டவட்டம்

  பிரதமர் மோடியை வழியனுப்பிய பின் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும். ” என்றார். 

  11:33 (IST)

  அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈபிஎஸ் தரப்புடன் சமாதானத்துக்கு தயார் என ஓபிஎஸ் எதிர்ப்பு  தகவல். ஒபிஎஸ் தரப்புடன் சமாதானத்துக்கு தயார் இல்லை என ஈபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்  என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

  11:17 (IST)

  பிரதமர் மோடி உரை : பட்டம்பெறும் மாணவர்கள் தங்கள் மனதில் எதிர்காலத்தை உருவாக்கி விட்டீர்கள். ஒட்டுமொத்த உலகம் இந்திய இளைஞர்களை உற்றுநோக்குகிறது. அப்துல்கலாம் அவர்களால் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு  பெருமை. கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உதவிய விஞ்ஞானிகள்,மருத்துவர்கள் ,பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி

  11:3 (IST)

  மாணவர்கள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள் - பிரதமர் மோடி பேச்சு

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினர்.  தமிழில் வணக்கம் எனக்  கூறி தனது உரையை தொடங்கினார். மாணவர்கள்தான் நாட்டை கட்டமைப்பவர்கள்.  பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

  10:44 (IST)

   பிரதமர் வருகை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பெருமை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு, “ செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் தமிழகத்துக்கு பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைத்த பிரதமருக்கு நன்றி. பிரதமர் மோடியின் வருகை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைத்த பெருமை” என்றார்.

  10:32 (IST)

  தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் - பொன்முடி பேச்சு

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “ தொழில்முனைவர்களாக மாணவர்கள் வளர வேண்டும் என்பதற்காக முதல்வர் நான் முதல்வன் திட்டத்தை துவக்கியிருக்கிறார். தமிழகம் இந்தியாவில்  உயர்கல்வி பயில்வோரில் 53சதவிகிதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.


  10:28 (IST)

  அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா தொடங்கியது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில் நடைபெறுகிறது. தலைமை விருந்தினராக 70 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் பங்கேற்றுள்ளார்.  பிரதமர் மோடி பங்கேற்று தலைமை உரை நிகழ்த்துகிறார். பல்கலைக்கழக அளவில்  முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பிரதமர் மோடி வழங்குகிறார். இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். 

  10:22 (IST)

  அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

  9:58 (IST)

  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தலைமை விருந்தினராக பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்குகிறார்.