Live: சிறந்த அறிவாளிகளையும் ஆழமான கலாச்சாரத்தையும் கொண்டது தமிழக மண் - பிரதமர்

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | July 28, 2022, 20:08 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 12 DAYS AGO

    AUTO-REFRESH

    20:6 (IST)

    அற்புதமான அறிவாளிகளையும் ஆழமான கலாச்சாரத்தையும் கொண்டது தமிழக மண் என 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு.

    20:4 (IST)

    44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவக்க விழாவில் விருந்தோம்பல் குறித்த திருக்குறளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு.


    20:1 (IST)

    ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்து - பிரதமர்

    குறைந்த காலத்தில் அற்புதமான ஏற்பாடுகளை செய்த இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி பேச்சு.


    19:56 (IST)

    வாய்ப்புகளை தமிழகத்துக்குத் தாருங்கள்

    இது போன்ற வாய்ப்புகளை தொடர்ந்து தமிழகத்துக்கு தாருங்கள் என 44வது செஸ் ஒலிம்பியாட் மேடையில் பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை.

    19:46 (IST)

    கொரோனாவால் பிரதமரை நேரில் அழைக்கமுடியவில்லை - முதல்வர்

    கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கமுடியவில்லை. இதை நான் தொலைபேசியில் தெரிவித்தபோது பிரதமர் தான் கண்டிப்பாக கலந்துக்கொள்வதாக பெருந்தன்மையுடன் தெரிவித்தார்.
    - முதல்வர் முக ஸ்டாலின்

    19:40 (IST)

    பிரதமர் நரேந்திர மோடிக்கு செஸ் மிகவும் பிடித்த விளையாட்டு என்றும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது 20000 செஸ் வீரர்களை வைத்து மிகப் பெரிய போட்டியை நடத்தியதாகவும் 44வது செஸ் ஒலிம்பியாட்  துவக்க விழாவில் முதல்வர் முக ஸ்டாலின்  பேச்சு.


    19:34 (IST)

    44வது செஸ் ஒலிம்பியாட்  தீபத்தை கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்தி  வந்து முதல்வர் முக ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை இளம் கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்கியானந்தா, குகேஷ் உள்ளிட்டோர் வாங்கி விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினர்.


    19:24 (IST)

    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செஸ் வரலாறு குறித்தும், 44வது செஸ் ஒலிம்பியாட் தீபம் கடந்து வந்த பாதை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கம் குறித்தும் பேசி வருகிறார். 


    19:25 (IST)

    மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செஸ் வரலாறு குறித்தும், 44வது செஸ் ஒலிம்பியாட் தீபம் கடந்து வந்த பாதை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கம் குறித்தும் பேசி வருகிறார். 


    19:22 (IST)

    44வது செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா சிறப்பாக இருந்ததாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் தன்னுடைய பேச்சில் மகிழ்ச்சி தெரிவித்தார். விஸ்வநாதன் மற்றும் மாக்னஸ் கார்ல்ஸன் உள்ளிட்டோர் வழிநடத்துவதாகவும் தெரிவித்தார்.