* காலை 6:30 மணியளவில் இபிஎஸ் வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் நோக்கி வேனில் புறப்பட்டார்.
* பரபரப்பான சூழலில் பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை எதிர்நோக்கி இரு தரப்புகளும் காத்திருந்த சூழலில் ஓபிஎஸ் -ன் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. காலை 9.15 மணிக்கு வந்த தீர்ப்பில் பொதுக்குழு நடப்பதற்கு எந்த தடையுமில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்தது.
* ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைப்பற்றினர். அலுவலகக் கதவுகளை உடைத்து ஓபிஎஸ் அலுவலகத்துக்குள்ளே நுழைந்தார்.
* பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நீக்கம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* துணைப்பொதுச்செயலாளராக கே.பி முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* பொதுக்குழுவில் பேசிய ஓ.எஸ்.மணியன் விரைவில் நிரந்தர பொதுச்செயலாளராக உருவெடுக்க இருக்கும் அண்ணன் ‘புரட்சித் தலைமகன்’ எடப்பாடியாரை வணங்குகிறேன் எனப் புதுப்பட்டம் வழங்கினார்.
* ஓபிஎஸ் ஐ நீக்க வேண்டும் என பொதுக்குழுவில் கூடியிருந்தோர் முழக்கம் செய்தனர். ஓபிஎஸ் ஐ நீக்கத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சிவி சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
* ஓபிஎஸ் ஐ பொருளாளர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* வைத்தியலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோரும் நீக்கப்பட்டனர். அவர்களுடன் அதிமுகவினர் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
* செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, கேபி முனுசாமிக்கோ தன்னை நீக்க எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தார்.
இபிஎஸ் ஐ தான் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்தார்.
* சட்ட ஒழுங்கு பிரச்சினைக் காரணமாக அதிமுக அலுவலகத்துக்குச் சென்ற காவல்துறையினர் ஓபிஎஸ் தரப்பை வெளியேற்றி, வருவாய்த்துறையினர் உதவியோடு சீல் வைத்தனர்.
* பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வை முடித்து சென்னை திரும்பினார் இபிஎஸ்.