Home /News /tamil-nadu /

குடிநீர் குழாயில் உடைப்பு.... 30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்

குடிநீர் குழாயில் உடைப்பு.... 30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்

கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது.

கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது.

கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karur, India
    கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வானை நோக்கி சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.

    கரூர் மாவட்டம், மாயனூரர் காவிரி கதவணை அருகே திருக்காம்பூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. சேங்கல்,  தரகம்பட்டி, கடவூர் வழியாக நந்தம் வரை காவிரி நீர் கொண்டு சென்று பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தரகம்பட்டி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதால் இரண்டு புறங்களிலும் ஜேசிபி, ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக மண்களை அகற்றி தார்சாலை போடப்பட்டு வருகிறது.

    காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு


    தரகம்பட்டி கடைவீதி அருகே அரசு பள்ளி முன்பு ஜேசிபி எந்திரம் மூலம்  இப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்டதால் வானை நோக்கி சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.  கரூர் - வையம்பட்டி சாலையில் காவிரி நீர் ஆறாய் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த அரசு பள்ளிக்குள் தண்ணீர் சென்று சூழ்ந்து கொண்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் ராட்சச கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் இன்றும் நாளையும் நத்தம் பகுதிக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர் : தி.கார்த்திகேயன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cauvery water, Karur

    அடுத்த செய்தி