சானிடைசரில் தீக்குச்சி வைத்து விளையாடிய சிறுவர்கள் - திடீரென தீ பற்றியதில் இரு சிறுவர்களுக்கு படுகாயம்

சானிடைஸர் (கோப்புப்படம்)

சானிடைசரில் தீக்குச்சி வைத்து விளையாடியபோது திடீரென தீ பற்றியதில் இரு சிறுவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.

  • Share this:
    காஞ்சிபுரம் அருகே சானிடைசரில் தீக்குச்சி வைத்து விளையாடியபோது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதில் இரு சிறுவர்கள் காயமடைந்தனர். காவேரிப்பாக்கம் சாந்தி நகரைச் சேர்ந்த ஜெயவேலின் 11 வயது மகனும், ஆண்டாள் நகரை சேர்ந்த தாமோதரனின் 7 வயது மகனும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை கட்டைகள் மீது உற்றி தீக்குச்சியை அருகில் வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.    இதில், எதிர்பாராதவிதமாக தீ பிடித்ததால் இரு சிறுவர்களும் காயமடைந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்ட நிலையில், குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் இருவருக்கும் 18 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருப்பது தெரியவந்ததாதால், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Published by:Rizwan
    First published: