ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதம் மாற வற்புறுத்தி அந்தரங்கப் புகைப்படங்களை பரப்பிய காதலன் கைது... இன்ஸ்டா காதலி பகீர் புகார்

மதம் மாற வற்புறுத்தி அந்தரங்கப் புகைப்படங்களை பரப்பிய காதலன் கைது... இன்ஸ்டா காதலி பகீர் புகார்

மதம் மாற வற்புறுத்தி அந்தரங்கப் புகைப்படங்களை  பரப்பிய காதலன் கைது

மதம் மாற வற்புறுத்தி அந்தரங்கப் புகைப்படங்களை பரப்பிய காதலன் கைது

திருப்பூரில்  இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபருடன் ஒன்றாக வாழ்ந்த பெண்ணை மதம் மாற வற்புறுத்தி அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருப்பூரை சேர்ந்தவர் 25 வயதான இமான் ஹமீப் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் இன்ஸ்டாவில் சாட் செய்து வந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதால் அவருடன் நெருங்கிப் பழகிய பெண் அவருக்கு பண உதவியும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பூருக்கு வரவழைத்த இமான் அவருடன் காஞ்சி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தார். சில நாட்கள் கழித்து பெண்ணை மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய இமான், மதம் மாறி பெயரை மாற்றிக் கொண்டால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். அதற்கு உடன்படாத பெண் தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தோறும் தொழுகுமாறும், புர்கா அணிந்து செல்லுமாறும் இமான் வற்புறுத்த ஆரம்பித்தார். இதற்கு உட்படாத பெண்ணை சாதிப் பெயரைச் சொல்லி கடுமையாகத் திட்டியதுடன், பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த பெண் தன் சொந்த ஊரான கரூருக்கு சென்று விட்டார். திருப்பூரில் தனது கல்விச் சான்றிதழ்களை விட்டுச் சென்றதால்  மீண்டும் எடுக்க வந்த பெண்ணை மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டார் இமான். அதன் மூலம் பெண்ணின் இன்ஸ்டா ஐடிக்குள் சென்று அவர்கள் தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Also Read : மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு... ரூ.40 கோடி கதை பின்னணி என்ன?

மேலும் பெண்ணின் உறவினர்களிடம் செல்போன் மூலம் பேசிய இமான் அவரை தரக்குறைவாக பேசியதுடன் அவரது அரை நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து தட்டிக் கேட்ட போது மேலும் பல அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடப் போவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இதுகுறித்து பெண் கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சாதி வன்கொடுமை, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இமான் ஹமீப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Tiruppur