அமைச்சர் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்த சிறுவன்: சிறுவனை கையோடு தூக்கிய அமைச்சர்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்த சிறுவன்: சிறுவனை கையோடு தூக்கிய அமைச்சர்

அமைச்சர் பாண்டியராஜன்

முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை பொது மக்களுக்கு எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரித்தார்.

  • Share this:
    அதிமுக சார்பில் வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆவடி தொகுதி, திருவேற்காடு பகுதியில், வீதி வீதியாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு  சேகரித்தார் அமைச்சர் பாண்டியராஜன்.

    ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் பிரமுகர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, ஆவடி தொகுதிக்கு உட்பட்ட  திருவேற்காடு பிள்ளையார் கோவில் தெரு பாரதி நகர் வேலப்பன்சாவடி பேருந்து நிலையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் வாக்காளர்களை  நேரில் சந்தித்து இரட்டை இலைச் சின்னத்தில் முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை பொது மக்களுக்கு எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்குகள் சேகரித்தார்.

    அப்போது சிறுவன் ஒருவன் அமைச்சருக்கு சால்வை அணித்தபோது உயரம் பத்தாத நிலையில் அமைச்சர் தலை குணிந்து சால்வை பெற்றார். அத்துடன், சிறுவனை கையோடு தூக்கினார். அப்போது அந்த சிறுவன் தான் அணிவித்த சால்வயை அமைச்சரின் கழுத்தில் சரிசெய்துவிட்டார்.

    Must Read :  "பெற்ற தாயும் இல்லை, அறிமுகப்படுத்திய தாயும் இல்லை..." - பிரச்சாரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

     

    இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  இதில் பெண்கள் பலர் பாண்டியராஜன் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தி ஆதரவு தெரிவித்தனர்.
    Published by:Suresh V
    First published: