செல்போன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட மாணவி விவகாரத்தில் திருப்பம்... எரியூட்டப்பட்ட இடத்தில் இளைஞரின் வாட்ச் கண்டெடுப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்ற ஐடிஐ மாணவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவர் தனது காதலியின் சிதையில் குதித்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share this:
உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த நர்சிங் மாணவி நித்யஸ்ரீ, ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் போன மன உளைச்சலில் கடந்த 29-ஆம் தேதி விஷமருந்தினார். பின்னர் சிகிச்சை பலனின்றி 31-ஆம் தேதி உயிரிழந்தார். ஒரே செல்போனில் தனது இரு சகோதரிகளுடன் ஆன்லைன் வகுப்பை படிக்க தந்தை வற்புறுத்தியதால் நித்யஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் அவரது உடல் 31-ஆம் தேதி மாலை தகனம் செய்யப்பட்டது. இதனிடையே நித்யஸ்ரீயின் அருகாமை கிராமமான ஆத்தூரை சேர்ந்த ராமு என்ற இளைஞரை காணவில்லை என அவரது பெற்றோர் திருநாவலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.இது குறித்த விசாரணையின் போது ஆன்லைன் வகுப்பு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட நித்யஸ்ரீயை, ராமு ஒருதலை பட்சமாக காதலித்து வந்தது தெரியவந்திருக்கிறது. அதோடு நித்யஸ்ரீ உயிரிழந்ததால் தானும் இறக்கப்போவதாக ராமு தனது நண்பர்களிடம் கூறியது தெரியவந்திருக்கிறது.

மேலும் படிக்க...இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்.21-ஆம் தேதி தொடங்கும்: பாரதியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு..

இதனை அடுத்து நித்யஸ்ரீ சிதையூட்டப்பட்ட இடத்தில் போலீசார் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது நித்யஸ்ரீயின் சிதை அருகே ராமுவின் கைகடிகாரம், மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இதனை அடுத்து அவற்றை சேகரித்த போலீசார் ராமு என்னவானார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading