17 வயது சிறுவன் கஞ்சா போதையில் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் உள்ள கிராமங்காளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 12:58 PM IST
17 வயது சிறுவன் கஞ்சா போதையில் தூக்கிட்டு தற்கொலை
அருண்குமார்
Web Desk | news18
Updated: December 6, 2018, 12:58 PM IST
புதுச்சேரியில் கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கஞ்சா விற்பனையைத் தடுத்து சிறுவர்களைக் காப்பாற்றும்படி சிறுவனின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி நகர்ப் பகுதியை அடுத்த கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. கஞ்சாவுக்கு கிராமப்புற சிறுவர்களையும் இளைஞர்களையும் அடிமையாக்கி வருகிறது கஞ்சா விற்பனைக் கும்பல்.

இதன் உச்சகட்டமாக கஞ்சா போதைக்கு அடிமையான 17 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கஞ்சா விற்பனையைத் தடுத்து சிறுவர்களைக் காப்பாற்றும்படி சிறுவனின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய அளவில் கைப்பந்து விளையாட்டில் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற சிறந்த விளையாட்டு வீரரான இந்த 17 வயது சிறுவன் அருண்குமார் இன்று உயிருடன் இல்லை. கஞ்சா போதைக்கு அடிமையானதால் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலேயே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக இவரது குடும்பத்தினர் கதறுகின்றனர் .

என்ன நடந்தது அருண்குமாருக்கு?

புதுச்சேரி அடுத்த டி.என்.பாளையம் எனப்படும் திம்பநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். ஐடிஐ படித்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை திடீரென துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இவரது தற்கொலை கிராமத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாகப் படிக்கக் கூடிய, விளையாட்டில் திறமை வாய்ந்த சிறுவன் அருண்குமார் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர் கஞ்சாவுக்கு அடிமையானதுதான் காரணம் என்று அவரது பெரியப்பா கூறுகிறார்.
Loading...
அருண்குமாரின் இறப்பை தாங்கமுடியாமல் கதறி அழும் அவரது குடும்பத்தினர்


செவ்வாய்க்கிழமை அன்று போதை வெறியில், தாயுடன் தகராறில் அருண்குமார் ஈடுபட்டுள்ளார். பிறகு வீட்டில் இருந்த பீரோ, டிவி, மின்விசிறி போன்றவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தாயையும் தாக்கத் தொடங்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதையடுத்தே துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தனது மகன் மட்டுமின்றி, கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் பல சிறுவர்களையும் கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கி வைத்துள்ளார்கள் என அருண்குமாரின் தாய் புலம்புகிறார்.  கிராமத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனனத் தொடர்ந்து அருண்குமார் கஞ்சா போதையால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அவரது பெரியப்பா தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார்,  டி.என். பாளையத்தில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என உறுதியளித்துள்ளனர்.

Also see... கஞ்சாவுக்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை!
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்