திருச்சி மாவட்டம் தென்னூர் அன்னை சத்யா நகர் பெயிண்டர் பிரேம்குமார்- நளினி தம்பதியின் மகன், 5 வயது சிறுவன் யஸ்வந்த். நேற்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த வரை காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவரது வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்து இறந்து விட்டார் என தெரியவந்துள்ளது.
இறந்தவரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யஸ்வந்த்தின் தாய் நளினி கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் மாநகராட்சியின் அலட்சியத்தால் திறந்து கிடந்த சாக்கடையில் விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். எனவே அனைத்து சாக்கடைகளையும் மூட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.