அத்திவரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

” 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது”

அத்திவரதரை தரிசிக்க வந்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது!
அத்திவரதர் தரிசனத்தில் பிறந்த ஆண் குழந்தை
  • News18
  • Last Updated: August 14, 2019, 11:52 AM IST
  • Share this:
அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீர் பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழ்ந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த சம்பவம் கோவிலுக்கு வந்த பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தை காண  நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் லட்சகணக்கில் வந்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்த அத்திவரதர் வைபவம் வரும் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் 45-வது நாளான இன்று அத்திவரதரை தரிசிக்க வந்த நெமிலிபானவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவரின் மனைவி விமலாவிற்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.


Photos | அத்திவரதரை தரிசனம் செய்த ரஜினி!

உடனே அவரை 16-ம் கால் மண்டப மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 3 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்தது. இப்போது அவர் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக பிரசவம் பார்த்த செவிலியர்கள் ஜன ஸ்ரீ மற்றும் யோக வள்ளி கூறியுள்ளனர்.

மேலும் படிக்க... வைகோவின் குரல் ஸ்டாலினுடையதா? கராத்தே தியாகராஜன்
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading