கன்னியாகுமரியில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவன் கைது

கன்னியாகுமரி இரணியலில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவன் கைது
மாதிரிப் படம்
  • Share this:
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு சிறுமி ஒருவரின் பெற்றோர் தனது மகளை இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த சிறுமி கோவில் திருவிழாவின்போது யானை ஊர்வலத்திற்கு யானை பாகன் ஒருவருடன் உதவியாளராக வந்த இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவரைக் காதலித்ததாகவும், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வல்லுறவு செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

Also read: கோவையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு


அந்த சிறுமியை பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகர்கோயில் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நேற்று இதே பகுதியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கியதாக 18 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாலியல் தொடர்பான இரு குற்றச் சம்பவங்கள் நடந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading