ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓ.பி.எஸ் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீச்சு | வீடியோ

ஓ.பி.எஸ் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீச்சு | வீடியோ

ஓபிஎஸ் மீது பாட்டில் வீச்சு.

ஓபிஎஸ் மீது பாட்டில் வீச்சு.

பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவர் வெளியேற முற்பட்டார். தொடக்கத்திலிருந்தே அவருக்கு எதிராக கோஷங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மீது

  தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

  இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

  கூட்டம் தொடங்கியது முதலே பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழியுமாறு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  பேசினார்.

  அதன் பின்பு அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மேடையில் ஆவேசமாக பகிரங்கமாக அறிவித்தார்.

  பின்னார் அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மேடையில் பேச முற்பட்டார். அப்போது அவருக்கு அவையில் பலத்த எதிர்ப்பு எழுந்துதது.

  இதனைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழு நடைபெறுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் மேடையில் முழக்கம் எழுப்பினர். எதிர்ப்பு வலுக்கவே ஓ பன்னீர்செல்வம் மேடையிலிருந்து கீழே இறங்கினார்.

  அப்போது அவர் மீது கூட்டத்திலிருந்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் காகிதங்கள் வீசப்பட்டன. அதன் பின்பு அவர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.

  மேடையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும், மாலைகள் அணிவித்தும் வாழ்த்து தெரிவித்த காட்சிகளும் அரங்கேறின.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: ADMK, Admk Party, OPS - EPS