• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நடிகர்கள் கட்சியில் சேர்ந்தால் இரு திராவிட கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் - குஷ்பு இணைவு குறித்து எஸ்.ஆர்.சேகர் கருத்து

நடிகர்கள் கட்சியில் சேர்ந்தால் இரு திராவிட கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் - குஷ்பு இணைவு குறித்து எஸ்.ஆர்.சேகர் கருத்து

பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர்

பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர்

குஷ்பு வருகையால் பலன் என்ற நோக்கத்தில் அவரை பாஜகவில் சேர்க்கவில்லை என்றும் தனி மனிதர்களால் பலன் பெறும் நிலையில் பாஜக இல்லை என்றும் அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.

  • Share this:
கோவையில் பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பாஜகவில் குஷ்பு இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், நடிகர்கள் கட்சியில் சேர்ந்தால் இரு திராவிட கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள் என்றார்.

தாம்பரத்தைத் தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது என்று  சொன்ன குஷ்புவுக்கு, இப்போது எல்லா இடங்களிலும் கட்சி இருப்பது தெரிந்திருக்கலாம் என்று கூறிய எஸ்.ஆர்.சேகர், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது அங்கிருக்கும் தலைவர்களை திருப்திப்படுத்த பாஜகவை குஷ்பு விமர்ச்சித்திருக்கலாம். இப்போது வந்ததற்கான காரணத்தை குஷ்புதான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

குஷ்புவால் பாஜகவுக்கு பலனில்லை என்று காங்கிரஸ் கட்சி சொல்வது அந்தக் கட்சியின் புலம்பல் என கூறிய அவர், பாஜகவுக்கு குஷ்பு வந்தால் கட்சியின்  நலனைக் காட்டிலும் நாட்டுக்கு எந்த விதத்தில் நலன் என்பதைத்தான் தங்கள் கட்சி பார்க்கும் எனவும் தனி மனிதர்களால் பலன் பெறும் நிலையில் பாஜக இல்லை எனவும் கூறினார்.

Also read: திமுகவில் தொடங்கிய பயணமும்.. குஷ்புவின் கடந்த பத்தாண்டு கால அரசியலும்..



தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஒரு  கூட்டு இயக்கம். குஷ்பு போன்றவர்கள் வருகையால் பலன் என்ற நோக்கத்தில் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவது அவர்கள் விருப்பம். மாநிலத்தில் ஒரு கட்சியின் பலம் அதிகரிக்கும்போது, பலர் வந்து இணைவார்கள். இது கட்சி பலமடைந்து வருகின்றது என்பதை உணர்த்தும் விஷயம் என்று தெரிவித்தார்.

நடிகர்கள் கட்சியில் சேருவதன் மூலம்  இரு திராவிட கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள், வாய்ப்புகள் பறிபோகும் எனவும் இதையும் மீறி பா.ஜ.கவின் மீது நம்பிக்கை கொண்டதால் அவர் இங்கு இணைகின்றார் எனவும் தெரிவித்தார். மேலும், எஸ்.ஆர்.சேகர், கணவரின் நிர்பந்தம் காரணமாக பாஜகவில் குஷ்பு இணைகின்றாரா என்பதற்கு அவரின் கணவர்தான் பதில் சொல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே போன பிறகு யார் மீதாவது பழியைப் போடவேண்டும் என்பதற்காகவே சுந்தர் சி மீது காங்கிரஸ் பழிபோடுகின்றது என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: