நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள் - மு.க.ஸ்டாலின்

தயாநிதிமாறன் அமைச்சராக இருந்த போது தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் 1 ரூபாயில் போன் பேசும் வசதியை ஏற்படுத்தினார் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள் - மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 15, 2019, 6:19 PM IST
  • Share this:
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘மத்தியில் நடப்பது மதவெறி பிடித்த ஆட்சி. அந்த சர்வாதிகார ஆட்சியை மாற்ற வரும் 18-ம் தேதி தயாநிதி மாறனுக்கு வாக்களிக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாற்பதும் நமதே நாடும் நமதே’ என்று கூறினார்.


மேலும் அவர், தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. நீங்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போகிறீர்கள். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியை மாற்றும் பொழுது இங்குள்ள எடுபுடி ஆட்சியும் மாறும் என்று பேசினார்.

இதையடுத்து பேசிய அவர், தயாநிதிமாறன் அமைச்சராக இருந்த போது தான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் 1 ரூபாயில் ஃபோன் பேசும் வசதியை ஏற்படுத்தினார். தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக அவர் பல சாதனைகளைச் செய்தவர். சென்னையில் நான் மேயராக இருந்தபோது மாநகராட்சியை சீர்படுத்தினேன், கல்வித்தரத்தை உயர்த்தினேன். மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டன என்று கூறினார்.
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also watch

First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...