முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வீடுகளுக்கே சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அசத்தல் திட்டம்

வீடுகளுக்கே சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அசத்தல் திட்டம்

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

Booster Dose Vaccine : இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி (பூஸ்டர் தடுப்பூசி) செலுத்திக் கொள்ள புதிய வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் படி, போன் செய்தால், வீட்டுக்கே வந்து தடுப்பூசி செலுத்துவர். 

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின்படி, அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி விலையில்லாமல் விரைந்து செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்களை கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்ககளப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்தும் பணியினை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (10.01.2022) தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) நேரடியாக சென்று செலுத்திக் கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி மையங்களின் விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre/ என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொண்டு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்திக்கொள்ளலாம்.

அவ்வாறு செல்லும் பொழுது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மாநகராட்சி தடுப்பூசி முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும்.

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்தி கொள்ள இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் கடந்த நபர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்த மாநகராட்சியின் சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் 1913, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

top videos

    மேலும், 60 வயதை கடந்த முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் அவர்களுக்கும் இல்லங்களிலேயே கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்.

    First published:

    Tags: Chennai, Corona Vaccine, MK Stalin, Omicron