Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாம்

தமிழகத்தில் இன்று ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

தடுப்பூசி - மாதிரிப்படம்

Booster Dose Vaccine : சென்னையில் 160 இடங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 600 இடங்களில் இன்று ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு விரைவாக ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ செலுத்த ஏதுவாக தமிழகம் முழுவதும் வியாழக்கிழமைதோறும் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் அதன்படி இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல, தமிழகத்தில் உள்ள முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அத்துடன், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 20,80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாமுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பொது சுகாதாரத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

    Must Read : ஜாதி ரீதியாக விமர்சனம்.. மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதா கைது

    அதன்படி, இன்று சென்னையில் 160 இடங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 600 இடங்களில் ‘பூஸ்டர் டோஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Corona Vaccine, Ma subramanian, Vaccination

    அடுத்த செய்தி