Home /News /tamil-nadu /

பொங்கல் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நிறுத்தம்

பொங்கல் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நிறுத்தம்

பொங்கல் முடிந்து ஜனவரி 16-ம் தேதி இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது

    பொங்கல் முடிந்து ஜனவரி 16-ம் தேதி இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. பொங்கலுக்கு 2-ம் நாளான ஞாயிறு அன்று அரசு பேருந்தில் பயணிக்க 32,000 பேர் இதுவரை முன்பதிவு செய்து இருந்தனர்.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. இதானல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வரும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஞாயிற்று கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் எந்த காரணமும் கூறமால் ஜனவரி 16-ம் தேதிக்கான சிறப்பு அரசு பேருந்து முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    Also Read : தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?

    பொங்கல் முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக 16-ம் தேதி 7,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட இருந்தன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 10-ம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து எதுப்போன்ற கட்டுப்பாடுகள் என்பது குறித்து முறையான அறிவிப்பு வரை முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Lockdown, SETC

    அடுத்த செய்தி