புத்தாண்டையொட்டி, சிறப்பு தள்ளுபடி.. மக்களிடம் தொடர்ந்து அதிகரிக்கும் புத்தக வசிப்பு பழக்கம்

Youtube Video

புத்தாண்டையொட்டி, சென்னையில் பதிப்பகங்கள் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளதால், புத்தக விற்பனை அதிகரித்துள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதால், வீடுகளிலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அதே நேரத்தில் மக்கள் மத்தியில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் பாரதி புத்தகாலய புத்தகங்களுக்கு 50 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக புத்தக கண்காட்சி நடத்தப்படாததால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்குவதாக, வாசகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கலை, இலக்கியம், வரலாறு, ஆராய்ச்சி என பல்வேறு வகை புத்தகங்களையும் வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, ரஷ்ய நாவல்கள், கம்யூனிசம் குறித்த புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகின்றன.

கொரோனா பரவலால் புத்தக கண்காட்சியை நடத்த முடியவில்லை என்றும், வாசகர்களிடம் புத்தகங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக, சலுகை விலையில் நூல்களை விற்பனை செய்வதாக பதிப்பகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேரில் வர முடியாதவர்கள் இணையதளம் மூலமாகவும் புத்தகங்களை வாங்குவதாக பதிப்பக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Published by:Sankaravadivoo G
First published: